உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாத்தணஞ்சேரி கன்னியம்மன் கோவிலில் தீமிதி விழா

சாத்தணஞ்சேரி கன்னியம்மன் கோவிலில் தீமிதி விழா

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில் உள்ள கன்னியம்மன் ்கோவிலில், நடப்பாண்டிற்கான ஆடி மாதம் திருவிழா, கடந்த 31ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.அதை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.நேற்று முன்தினம், காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும், மதியம் ஊரணி பொங்கல் வைத்தும் படையலிட்டனர்.அதை தொடர்ந்து, குடம் மலர் அலங்காரத்தில் ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. விரதம் இருந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ