உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பிவைப்பு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பிவைப்பு

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி அலுவலக இரண்டாவது தளத்தில் உள்ள அறையில், தேர்தலுக்கு பயன்படுத்தும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறை சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.நேற்று காலை, அறையில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில், செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் அருண்ராஜ் திறந்து வைத்தார்.தொடர்ந்து, நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா, தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கரன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

சட்டசபை தொகுதி பேலட் யூனிட் கன்ட்ரோல் யூனிட் வி.வி.பேட்

சோழிங்கநல்லுார் 801 801 865பல்லாவரம் 524 524 568தாம்பரம் 512 512 555செங்கல்பட்டு 535 535 579திருப்போரூர் 383 383 414செய்யூர் 315 315 342மதுராந்தகம் 328 328 356மொத்தம் 3,398 3,398 3679


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை