உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாதில் 1,000 பேருக்கு மஞ்சள் பை வழங்கல்

வாலாஜாபாதில் 1,000 பேருக்கு மஞ்சள் பை வழங்கல்

வாலாஜாபாத்:சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தையொட்டி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காஞ்சிபுரம் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில், வாலாஜாபாதில் நேற்று, 1,000 பேருக்கு மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி, வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.விதைகள் தன்னார்வ அமைப்பு சரண் மற்றும்மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், திருவேணி அகாடமி பள்ளி ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று, விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.அப்போது, அச்சாலை வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் கடை வியாபாரிகள், 1,000 பேருக்கு மஞ்சள் பைகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ