மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
13 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
13 hour(s) ago
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடல்மங்கலம் கிராமத்தில் நீர்வளத் துறைக்கு சொந்தமான சித்தேரி மற்றும் பெரிய ஏரி என, இரண்டு ஏரிகள் உள்ளன.இதில், 300 ஏக்கர் பரப்பிலான பெரிய ஏரியில், ஆண்டு தோறும் பருவ மழையை தொடர்ந்து ஏரி மீன்களை குத்தகை விடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை ஏரி மீன்கள் ஏலம் விடாமல் விடுபட்டுள்ளது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர், நவீன முறையிலான வலைகளை பயன்படுத்தி அதிக மீன்களை பிடித்து தினமும் விற்பனை செய்து வருகின்றனர்.இதுகுறித்து, கடல்மங்கலம் ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தலைவர் வீராசாமி கூறியதாவது:கடல்மங்கலம் ஏரி மீன்களை குத்தகை விடக்கோரி ஏற்கனவே நீர்வளத் துறை செயற்பொறியாளரிடத்தில் மனு அளித்து உள்ளோம்.தற்போது தனிநபர்கள் மீன்களைப் பிடித்து தனிப்பட்ட முறையில் வருவாய் ஈட்டி வருகின்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.எனவே, கடல்மங்கலம் ஏரியில் கடந்த ஆண்டு மீன் ஏலம் விட்டதைப் போல் இந்த ஆண்டும் குத்தகைக்கு விட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
13 hour(s) ago
13 hour(s) ago