உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மெக்ளின்புரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கிய குடிநீரும் கட்

மெக்ளின்புரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கிய குடிநீரும் கட்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி பகுதி குடிநீர் தேவைக்கு அவளூர் பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு, மெக்ளின்புரத்தில் சில நாட்களாக வீட்டு குடிநீர் குழாய்களில் சரி,வர தண்ணீர் வருவதில்லை என, அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:மெக்ளின்புரத்தில், ஒரு நாள் விட்டு ஒருநாள் என சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்வது வழக்கம். தற்போது அவ்வாரும் இல்லாமல், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால், தினமும் கடைகளில் பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி அருந்தும் நிலை உள்ளது. எனவே, மெக்ளின்புரம் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்