உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பு காரணமாக இன்று தாயார் குளம் சுடுகாடு இயங்காது

பராமரிப்பு காரணமாக இன்று தாயார் குளம் சுடுகாடு இயங்காது

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் தாயார்குளம் சுடுகாடு இயங்கி வருகிறது. இந்த சுடுகாடு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், மோட்ச ஜோதி தகன அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மட்டுமல்லாமல், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், உடல்களை கொண்டு வந்து இங்கு நவீன தகன மேடை மூலம் எரியூட்டப்படுகிறது.இந்நிலையில், நவீன தகன மேடையில் பராமரிப்பு பணி காரணமாக, இன்று ஒரு நாள், நவீன தகன மேடை இயங்காது என, அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த சுடுகாடுக்கு பதிலாக, வெள்ளைக்குளம் நவீன தகன மேடையை பயன்படுத்திக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ