மேலும் செய்திகள்
கால்வாய் சாலையோரம் பள்ளம் மண் நிரப்பாததால் விபத்து அபாயம்
10 hour(s) ago
நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி
10 hour(s) ago
வாலாஜாபாதில் அவசர சிகிச்சை பிரிவு: ஜனவரியில் திறக்க முடிவு
10 hour(s) ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் திருப்பருத்திகுன்றம், கலெக்டர் அலுவலக வளாகத்தை ஒட்டியுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ராகவேந்திரா நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர், தும்பவனம் கால்வாய் வாயிலாக சென்று வேகவதி ஆற்றில் கலக்கிறது.இக்கால்வாயில் செடி, கொடிகள், கோரைபுற்கள் வளர்ந்துள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் நீர்வழித் தடங்கள் புதர்மண்டி துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழைகாலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சூழும் நிலை உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தும்பவனம் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago