உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்

மழைநீர் வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, நேதாஜி தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், இரு ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.மேலும், காஞ்சிபுரத்தில் லேசான மழை பெய்யும்போதெல்லாம் இப்பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.மழை பெய்யும்போது, பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், மழைநீருடன் கலந்து சாலையில் தேங்குவதால், இப்பகுதியில் வசிப்பவர்கள் கழிவுநீர் கலந்த மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.இரு ஆண்டுகளுக்கு மேலாக மழை பெய்யும்போது, இப்பகுதியில் குளம்போல் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்குகிறது. நாள் கணக்கில் தேங்கும் கழிவுநீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தால், பெயரளவிற்கு பாதாள சாக்கடையில் அடைப்பு நீக்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் மீண்டும் கழிவுநீர் வழிந்தோடுவது வாடிக்கையாக உள்ளது.எனவே, 23வது வார்டு, நேதாஜி தெருவில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பை முழுதும் நீக்கவும், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை