உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

சென்னை:போலி ஐ.எஸ்.ஐ., முத்திரையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களை, இந்திய தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இது குறித்து, இந்திய தர நிர்ணய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளுர் மாவட்டம் அலமாதி கிராமத்தில், அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில் ஆலையில், இந்திய தர நிர்ணய அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.அங்கு, போலி ஐ.எஸ்.ஐ., முத்திரையை பயன்படுத்தி, தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, போலி முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 2 லிட்டர் அளவுள்ள, 1,782 தண்ணீர் பாட்டில்கள், 1 லிட்டர் அளவுள்ள 11,616 தண்ணீர் பாட்டில்கள், 500 மி.லி., அளவுள்ள 9,600 தண்ணீர் பாட்டில்கள், 300 மி.லி., அளவுள்ள 10,465 பாட்டில்கள் மற்றும் 2.5 லட்சம் போலியான ஐ.எஸ்.ஐ., முத்திரை 'லேபிள்'களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.இந்த சட்டவிரோத ஆலை, பி.ஐ.எஸ்., உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்துள்ளது.இந்த குற்றத்துக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.பொதுமக்களுக்கு இதுபோன்ற தகவல் கிடைத்தால், 'பி.ஐ.எஸ்., கேர்' செயலியை பயன்படுத்தியும் www.bis.gov.inஎன்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி