உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விழும் நிலையில் மின்கம்பம் வாகன ஓட்டிகள் திக்... திக்

விழும் நிலையில் மின்கம்பம் வாகன ஓட்டிகள் திக்... திக்

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராஜகுளம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தில் இருந்து, கரூர் கிராமம் வழியாக, முத்தியால்பேட்டை கிராமத்திற்கு செல்லும், பிரதான புறவழி சாலை உள்ளது.இந்த சாலையோரம், ராஜகுளம் - தென்னேரி மடுவு இடையே, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, தனியார் தொழிற்சாலை மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.குறிப்பாக, ராஜகுளம்- கரூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் மீது, சேக்கான்குளம் ஏரிக்கரையோரம் இருக்கும் சேத மின் கம்பம் முறிந்து விழும் அபாய நிலை உள்ளது.எனவே, சேக்கான்குளம் ஏரிக்கரையோரம் இருக்கும் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை