| ADDED : மே 13, 2024 05:52 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். கோடை வெப்பத்தை தவிர்க்கும் வகையில், நேற்று, பகல், 3:00 மணி அளவில், கோடை மழை பெய்தது.குறிப்பாக, காஞ்சிபுரம் சுற்றியுள்ள உத்திரமேரூர், வாலாஜாபாத், பரந்துார், கொட்டவாக்கம், கம்மவார்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று, மதியம் 3:00 மணியளவில், திடீரென மழை பெய்தது. வெயில் காய்ந்தபடி, சில நிமிடங்கள் மட்டுமே மழை பெய்தது.இதனால், புழுதி ஓட்டி வைத்திருந்த நிலத்தில், கால் பதியும் அளவிற்கு ஈரம் மற்றும் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது.மழை துவங்கிய சில நிமிடங்களில் மழை நின்றதால், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்தனர். பிற மாவட்டங்களில் கோடை மழை பெய்வது போல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எப்போது பெய்யும் என எதிர்பார்த்துள்ளனர்.