| ADDED : மே 11, 2024 12:44 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் உலக பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான 25வது ஆண்டு இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு. காஞ்சிபுரம் அரசு கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:00 - 3:30 மணி வரை நடந்து வருகிறது.மேலும், கீழம்பி சந்திரமோகன் இல்லம், புதுப்பாளையம் தெரு, துவக்கப்பள்ளி, பல்லவன் நகர் சமுதாய கூடத்திலும் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உலக பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனரும், திருக்குறள் பயிற்றுனருமான குறள் அமிழ்தன், புலவர் கு.பரமானந்தம் ஆகியோர் கூறியதாவது:முகாமில், 130 பேர் சேர்ந்துள்ளனர். இதில், 8 பேர் 1,330 குறள் மனப்பாடம் செய்துள்ளனர். 2 பேர் நடப்பு ஆண்டுக்காக தமிழக அரசிடம், 15,000 ரூபாய் பொற்கிழியும், சிறப்பு சான்றிதழும் பெற உள்ளனர். சிறு வயதில் இருந்தே திருக்குறளை பொருள் அறிந்து, மனப்பாடம் செய்வதன் வாயிலாக ஒழுக்கம், சிறந்த நினைவாற்றல், அன்பு, அடக்கம், பொறுமை, ஆளுமைத்திறன் உள்ளிட்ட அனைத்து சிறப்பும் ஒருங்கே பெறுவர். இப்பயிற்சியில் சேர விரும்புவோர், 93643 23915, 98942 27612 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.