உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விளக்கொளி பெருமாள் கோவில் கொடிமரத்திற்கு தங்க முலாம் கவசம்

விளக்கொளி பெருமாள் கோவில் கொடிமரத்திற்கு தங்க முலாம் கவசம்

காஞ்சிபுரம் : சட்டசபை 2022 - 23ன்படி, 1,000 ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணியின்கீழ், காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் செய்யப்பட்டு கடந்த மாதம் 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.திருப்பணியின் ஒரு பகுதியாக விளக்கொளி பெருமாள் கோவிலில், 18 லட்சம் ரூபாய் செலவில், 32 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் கடந்த மார்ச் 25ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில், கொடிமரத்திற்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.இதில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 234 கிலோ எடை கொண்ட செப்பு தகட்டில், தங்க முலாம் பூசப்பட்ட தகட்டின் வாயிலாக கொடிமரத்திற்கு தங்க கவசம் பொருத்தப்பட்டுள்ளது என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை