உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் பொது வினியோக குறைதீர் கூட்டம், தாலுகா வாரியாக கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது.லோக்சபா தேர்தல் காரணமாக, மூன்று மாதங்களாக இம்முகாம் நடைபெறாமல் இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த நிலையில், ஜூன் மாதத்திற்கான குறைதீர் கூட்டம், நாளை, காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது.காஞ்சிபுரம் தாலுகாவில் வளத்தோட்டம் கிராமத்திலும், உத்திரமேரூர் தாலுகாவில் பெருங்கோழி கிராமத்திலும், வாலாஜாபாத்தில் நாயக்கன்குப்பம், ஸ்ரீபெரும்புதுாரில் சந்தவேலுாரிலும், குன்றத்துாரில் மணிசேத்துப்பட்டு கிராமத்திலும் பொதுவினியோக குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.இம்முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் பெறலாம்.மேலும், புதிய குடும்ப அட்டை கேட்டும், நகல் குடும்ப அட்டைக்கும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை