உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மனைவியை கத்தியால் கிழித்த கணவன் கைது

மனைவியை கத்தியால் கிழித்த கணவன் கைது

சென்னை, : ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், மாசிலாமணி ஈஸ்வரர் நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் சத்யராஜ், 36; ஆட்டோ ஓட்டுனர்.இவரது மனைவி சுகன்யா, 33. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடன் தொல்லையால் அவதிப்பட்ட சத்யராஜ், நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது ஆத்திரம் அடைந்த சத்யராஜ், பேப்பர் கிழிக்கும் கத்தியால் சுகன்யாவின் கழுத்தில் கிழித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த சுகன்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.திருமுல்லைவாயில் போலீசார் சத்யராஜ் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை