மேலும் செய்திகள்
இடையூறான மின்கம்பம்: மணியாட்சியில் அகற்றம்
9 hour(s) ago
காஞ்சிபுரம்:தமிழக அரசின், 'நான் முதல்வன்' கல்லுாரி கனவு நிகழ்ச்சி, சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுாரியில், இன்று நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்று, உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களை பெறலாம். உயர்கல்வி பற்றி பல்வேறு தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.கல்லுாரிகளில் இட ஒதுக்கீடு, பாலிடெக்னிக் படிப்புகள், பொறியியல் கல்லுாரியில் உள்ள பாடப்பிரிவுகள், சேர்க்கை விபரம், வங்கிகளில் கல்வி கடன் போன்ற மாணவர்களுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும், இந்நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் என, 11,455 மாணவ - மாணவியர் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை தாம்பரத்தில் இன்று நடத்துவதால் பேருந்து, ரயில் பிடித்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் போன்ற இடங்களில் நடத்தியிருக்க வேண்டும் என்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் என, 11,455 மாணவ - மாணவியர் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை தாம்பரத்தில் இன்று நடத்துவதால் பேருந்து, ரயில் பிடித்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் போன்ற இடங்களில் நடத்தியிருக்க வேண்டும் என்கின்றனர்.
9 hour(s) ago