உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சர்வதேச செஸ் போட்டி துவக்கம்

சர்வதேச செஸ் போட்டி துவக்கம்

சென்னை, சதுரங்க ஆட்டத்தில், 'பிடே' விதிப்படி, ஒரு வீரர், 'சர்வதேச மாஸ்டர்' எனும் தகுதியைப் பெற, 2,400 புள்ளிகளுடன், குறைந்தது மூன்று சர்வதேச மாஸ்டர்கள் அல்லது கிராண்ட் மாஸ்டர்களுடன் மோத வேண்டும். அதில் எடுக்கப்படும் புள்ளிகள் மற்றும் நார்ம்ஸ் அடிப்படையில், அவருக்கு சர்வதேச மாஸ்டர் அங்கீகாரம் கிடைக்கும்.அந்த வகையில், ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியை, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தப்படுகிறது.இரண்டு கட்டப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று மூன்றாம் கட்டத்திற்கான ஆட்டம் துவங்கியது. இதில், தமிழக வீராங்கனை தேஜஸ்வினி, தமிழக வீரர் ஆகாஷ், ஹர்ஷத் உட்பட ஐந்து இந்திய வீரர்கள், ஐந்து வெளிநாட்டு வீரர்களுடன் 'சுவிஸ்' முறையில் மோதி வருகின்றனர். காலை நடந்த துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர் ஆர்.ஆர்.லக் ஷ்மணன், போட்டியில் விளையாடும், துர்க்மெனிஸ்தானின் ஜி.எம்.அன்னகெல்டியேவ் ஒராஸ்லிக்கு எதிராக விளையாடி, முதல் நகர்வை செய்து போட்டியை துவக்கினார்.நிகழ்வில், மாநில செஸ் சங்க செயலர் ஸ்டீபன் பாலசாமி, பொருளாளர் சீனிவாசன் மற்றும் நடுவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர்.தொடர்ந்து, மாலை 3:30 மணிக்கு முதல் சுற்று துவங்கி இரவு 7:00 மணி வரை நடந்தது. போட்டிகள் தொடர்ந்து, இம்மாதம், 12ம் தேதி வரை நடைபெறும் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ