உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு மகளிர் பள்ளியில் அதிநவீன கழிப்பறை திறப்பு 

அரசு மகளிர் பள்ளியில் அதிநவீன கழிப்பறை திறப்பு 

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அதிநவீன முறையில் தானியங்கி வசதியுடன் சுத்தம் செய்யும் 20 கழிப்பறைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான 1 கழிப்பறை, நாப்கின் வசதி,ஓய்வு அறை, தானியங்கி முறையில் கை கழுவும் குழாய், கை உலர்த்தும் கருவிஉள்ளிட்டவையும், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஒதுக்கீடு செய்த 49.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இப்பணி முடிந்து ஐந்து மாதங்களாகியும் கழிப்பறை திறக்கப்படாததால், மாணவியர் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, கழிப்பறையில் கூடுதல் வசதியாக, மின் தடை ஏற்பட்டாலும் தடையின்றி தானியங்கி குழாய்கள் இயங்கும் வகையில், சூரிய மின்சக்தி சோலார் பேனல் பொருத்தப்பட்டு, அதிநவீன கழிப்பறை திறப்பு விழா நேற்று நடந்தது.காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் கழிப்பறையை திறந்து வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம்மேயர் மகாலட்சுமி, கமிஷனர் செந்தில் முருகன், பள்ளி தலைமை ஆசிரியை கோமதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை