உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் நிறுத்தும் வாகனங்களால் ஒரகடத்தில் விபத்து அதிகரிப்பு

சாலையில் நிறுத்தும் வாகனங்களால் ஒரகடத்தில் விபத்து அதிகரிப்பு

ஸ்ரீபெரும்புதுார் : வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்க பெருமாள் கோவில் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடம் உள்ளது. இப்பகுதியைச் சுற்றி, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள ஓரகடம் சந்திப்பில், வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை, மேம்பாலம் கீழே,ஸ்ரீபெரும்புதுார் - -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை செல்கிறது.தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் சாலைகளை பயன்படுத்தி தனியார் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில், தொழிற்சாலைகளுக்கு மூலப்பெருட்கள் ஏற்றிவரும் கன்டெய்னர் லாரிகள், வண்டலுார் -- வாலாஜா பாத்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலைகளின் ஓரம் நிறுத்தப்படுகிறது.ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு வைப்பூர், வடக்குப்பட்டு, மேட்டுப்பாளையம், பண்ருட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில், கனரக வாகனங்கள் நிறுத்த முனைமம் இருந்தும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.இவ்வழியாக வரும் வாகனங்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள கன் டெய்னர் லாரிகளில் மோதி, அவ்வப்போது விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, நெடுஞ்சாலைகளின் ஓரம் நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ