உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் மோட்டாரை சீரமைக்க வலியுறுத்தல்

மின் மோட்டாரை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள தாயார் குளம், எம்.ஜி.ஆர்., நகர் கிழக்கு பகுதியில், 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு கூடுதல் குடிநீர் தேவைக்காக மாநகராட்சி சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.அப்பகுதியினர் வீட்டு உபயோக தேவைக்கு, குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர். இரு மாதங்களுக்கு முன், ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. மேலும், குடிநீர் தொட்டியில் குழாய் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் ஓட்டை ஏற்பட்டள்ளதால், குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது. இதனால், இப்பகுதியினர் கூடுதல் குடிநீர் தேவைக்கு, வேறு பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டியுள்ளது.எனவே, பழுதடைந்த நீர்மூழ்கி மின்மோட்டாரையும், குடிநீர் தொட்டியில் ஏற்பட்டுள்ள ஓட்டையையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி