உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வலியுறுத்தல்

மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி, 27 வது வார்டு, நத்தப்பேட்டை கமலம் நகர், ராஜா அவென்யூ உள்ளிட்ட பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்காக கமலம் நகரின் மின்மாற்றி எனப்படும் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.முறையான பராமரிப்பு இல்லாததால், மின்மாற்றியை தாங்கிப்பிடிக்கும் மின்கம்பம் மற்றும் மின்கம்பியில் கொடிகள் படர்ந்துள்ளன. மழை பெய்யும்போது ஈரப்பதம் காரணமாகவும், காற்றடிக்கும் போது மின்கம்பிகள் மிது உரசி மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பம் மற்றும் மின்கம்பியில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்