| ADDED : ஏப் 30, 2024 09:42 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனம் சார்பில், மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன், வரும் 14ல் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த 22 செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.ஃப்ளோரிடா மேயோ கிளினிக் உணவு மண்டல குடல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் கென்னத் ஆர் டிவால்ட், வயிறு மற்றும் குடற்புண்களை கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் காணொலி வாயிலாக உரையாற்றினார்.காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரி எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் துறை பேராசிரியர் டாக்டர் எம்.பி. பார்த்தசாரதி மருத்துவர்களுக்கான நிதி நிர்வாகம், காப்பீடு மற்றும் முதலீடு என்ற தலைப்பில் நேரடி உரை நிகழ்த்தினார்.மருத்துவ கல்வி செயலர் டாக்டர் ந.சு.ராதாகிருஷ்ணன் அறிமுக உரை நிகழ்த்தினார். இணை செயலர் டாக்டர் வெ. முத்துக்குமரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.