உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பவுர்ணமிக்கு சிறப்பு பஸ் உத்திரமேரூரிலிருந்து வேண்டும்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பவுர்ணமிக்கு சிறப்பு பஸ் உத்திரமேரூரிலிருந்து வேண்டும்

பவுர்ணமிக்கு சிறப்பு பஸ் உத்திரமேரூரிலிருந்து வேண்டும்

உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பவுர்ணமி தினத்தன்று திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலை கோவிலக்கு கிரிவலத்திற்கு சென்று வருகின்றனர். ஆனால், உத்திரமேரூரில் இருந்து, திருக்கழுக்குன்றத்திற்கு நேரடி பேருந்து வசதி இல்லை.இதனால், உத்திரமேரூரில் இருந்து, செங்கல்பட்டு சென்று, செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் செல்லும் பேருந்தில் ஏறி, திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டியுள்ளது.இதனால், உத்திரமேரூரில் இருந்து, திருக்கழுக்குன்றம் செல்லும் பயணியருக்கு, பயண நேரம் விரயமாவதுடன், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.எனவே, பவுர்ணமி தோறும் உத்திரமேரூர் - திருக்கழுக்குன்றம் இடையே சிறப்பு பேருந்து இயக்க அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தி.சே.அறிவழகன்,திருப்புலிவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ