| ADDED : மே 28, 2024 03:56 AM
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில் இருந்து, நல்லுார், தர்மநாயக்கன்பட்டரை வழியாக வையாவூர் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் சாலை உள்ளது.வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இச்சாலையில், தர்மநாயக்கன்பட்டரை பகுதியில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.இதனால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. மழை காலத்தில் சாலை சேதமடைந்த பள்ளத்தில் மழைநீர் தேங்குவதால் நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- சி.மணிகண்டன்,காஞ்சிபுரம்.