| ADDED : ஜூலை 02, 2024 02:32 AM
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், போந்துார் அடுத்த, தெரசாபுரத்தில் இருந்து கண்ணந்தாங்கல் பிரதான சாலை பிரிந்து செல்கின்றது.இந்த சாலை வழியே, கடுவஞ்சேரி, குண்டுபெரும்பேடு, வளத்தான்சேரி, பேரிஞ்சம்பாக்கம் பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், அப்பகுதியில் இருந்து மழைநீர் சீராக வெளியேற, இச்சாலையில் தத்தனுார் அருகே, புதியதாக சிறிய பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், பாலத்தின் மேல் தார் ஊற்றி சாலை அமைக்கவில்லை.இதனால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, பாலத்தின் மீது தார் ஊற்றி சாலை அமைக்க, நெடுஞ்சாலை துறையினர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.