| ADDED : ஆக 06, 2024 01:58 AM
உத்திரமேரூர்:அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது கரும்பாக்கம் கிராமம். இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே, 2005ம் ஆண்டு, மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பின்மை காரணமாக மகளிர் சுகாதார வளாக கட்டடம் பழுதடைந்தது. மேலும், அக்கட்டடத்திற்குள் இருந்த கழிப்பறை உபயோக பொருட்கள் உடைந்து வீணானது. தற்போது இக்கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பழுதான மகளிர் சுகாதார வளாக கட்டடம் அருகே அங்கன்வாடி மையம், வி.ஏ.ஒ., அலுவலகம் மற்றும் பேருந்து நிறுத்தம் என, மக்கள் நடமாட்டம் பகுதியாக உள்ளது.இதனால், விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில் கைவிடப்பட்ட அக்கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.