உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் கோவில்களில் கத்திரி நிவர்த்தி அபிஷேகம்

காஞ்சிபுரம் கோவில்களில் கத்திரி நிவர்த்தி அபிஷேகம்

காஞ்சிபுரம் : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. ஆண்டுதோறும் கத்திரி வெயில் நிறைவு நாளில் சின்ன காஞ்சிபுரம், வரதராஜபுரம் தெருவில் உள்ள வரசக்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கத்திரி சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.அதன்படி நேற்று, கத்திரி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு 108 இளநீர் அபிஷேகம் நடந்தது. நீர்மோர், தயிர் சாதம், புளியோதரை, கூழ், நொய் கஞ்சி, பழரசம், குளிர்ச்சி காய்கறிகள், பழங்கள் அம்மனுக்கு படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு, சித்தி, புத்தி காசி விநாயகர் கோவிலில், மூலவருக்கு 108 இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிேஷகம் நடந்தது. பானகம், தயிர்சாதம், எலுமிச்சை, புளியோதரை உள்ளிட்டவை சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் அய்யப்பா நகர் தாய் படவேட்டம்மன் கோவிலில், கத்திரி அக்னி தோஷ நிவர்த்தி வசந்த விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம், கூழ் வார்த்தல் உள்ளிட்டவை நடந்தது. மாலை 6:00 மணிக்கு படவேட்டம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் எம்.ஜி. வடிவேல் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி