உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்ஒயரில் உரசும் மரக்கிளையை அகற்ற கோளிவாக்கத்தினர் வலியுறுத்தல்

மின்ஒயரில் உரசும் மரக்கிளையை அகற்ற கோளிவாக்கத்தினர் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோளிவாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையோரம், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க, மின்கம்பங்கள் வாயிலாக மின்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது.இதில், கோளிவாக்கம் மயானம் அருகில், மின்கம்பத்தில் உள்ள மின் ஒயர்களை மறைக்கும் அளவிற்கு, சாலையோரம் உள்ள சீமை கருவேலமரத்தின் கிளைகள் புதர்போல வளர்ந்துள்ளது.காற்றடிக்கும்போது மரக்கிளைகள் மின்ஒயரில் ஒன்றுடன் ஒன்று உரசும்போது, தீப்பொறி ஏற்பட்டு அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, மின்ஒயர்களை உரசும் வகையில் வளர்ந்தள்ள சீமை கருவேல முட்செடிகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை