உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விஷார் அகத்தியர் கோவிலில் மே 3ல் கும்பாபிஷேகம்

விஷார் அகத்தியர் கோவிலில் மே 3ல் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, விஷாரில், லோபாமுத்திரை அம்பிகா சமேத அகத்திய பெருமானுக்கு கருங்கற்களால், புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் பாலவிநாயகர், பாலசுப்ரமணியர் சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மாலை 4:00 மணிக்கு யாக சாலை பூஜை துவங்குகிறது.நாளை மறுதினம், காலை 7:45 மணிக்கு கோவில் விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து விநாயகர், முருகர், லோபாமுத்திரை அம்பிகா சமேத அகத்திய பெருமானுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ