| ADDED : மே 03, 2024 10:41 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், அனந்தஜோதி தெருவில், பாமா, ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணர் மற்றும் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அனந்தஜோதி தெரு, மடம் தோட்ட தெரு, சேலைராமசாமி தெருவினர் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடித்தனர்.இதை தொடர்ந்து, கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை காலை 9:45 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து நவநீத கிருஷ்ணருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், திருமஞ்சனம், அலங்காரம், மஹாதீபாரதனையும், இரவு 7:00 மணிக்கு நவநீத கிருஷ்ணர் வீதியுலா நடைபெறுகிறது.