பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.6.90 கோடி மதிப்பு இடம் மீட்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மனையில், வாடகைதாரராக இருந்து வந்த சீனிவாசன் என்பவரின் வாரிசுகள், வாடகை பாக்கி செலுத்த வேண்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2004ல் வழக்கு தொடரப்பட்டது.வாடகை பாக்கி தொகை 12 லட்சத்து 87 ஆயிரத்து 276 ரூபாய் செலுத்தாமல், நிலுவையில் இருந்து வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழு வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்பின், இணை ஆணையர் நீதிமன்றத்தின் வாயிலாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் மதிப்பு 6.90 கோடி ரூபாய்.