உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் கால்வாயில் லார்வா கொசு புழுக்கள் ஏரிவாய் கிராமத்தில் சுகாதார சீர்கேடு

கழிவுநீர் கால்வாயில் லார்வா கொசு புழுக்கள் ஏரிவாய் கிராமத்தில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமம், ஆற்றங்கரை தெரு மற்றும் அரச மரத் தெருவில் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் கான்கிரீட் கால்வாய் மூன்று ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.இக்கால்வாயில் விடப்படும் கழிவுநீர் வெளியேறும் வகையில் முறையான வழித்தடம் ஏற்படுத்தவில்லை. இதனால், கழிவுநீர் வெளியேற வழின்றி கால்வாயில் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால், அதில், லார்வா கொசு புழுக்கள் உள்ளதால், இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக இப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால், ஏரிவாய் கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், சாதாரண மழைக்கே கால்வாய் நிரம்பி விடுவதால், கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.எனவே, கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க வழி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏரிவாய் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை