உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தீர்மானத்தின்படி, காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், பார் அசோசியேஷன், காஞ்சிபுரம் லாயர்ஸ் அசோசியேஷன், காஞ்சிபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் இ.எல். கண்ணன், சிவகோபு, திருப்பதி முரளிகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற கோரியும், கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை