உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.45 லட்சம் சீட்டு மோசடி மதனந்தபுரம் தம்பதி கைது

ரூ.45 லட்சம் சீட்டு மோசடி மதனந்தபுரம் தம்பதி கைது

ஆவடி:போரூர், மதனந்தபுரம், சுப்பையா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி, 47. இவரது மனைவி அனிதா, 41. இவர்கள், வசித்த பகுதியில், 2022ம் ஆண்டு ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு ஆகியவற்றுக்காக பணம் வசூலித்தனர்.இந்த நிலையில், கடந்தாண்டு தீபாவளிக்கு முன், 10க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பண்டு மற்றும் ஏலச்சீட்டுக்கான பணம் 44.62 லட்சம் ரூபாய் கொடுப்பாக கூறியிருந்தனர்.ஆனால், அதற்கு முன்னதாக வீட்டை விற்று, தலைமறைவாகி விட்டனர். அவர்கள் பணம் மோசடி செய்தது குறித்து, கோவூர், ராதாபாய் நகரைச் சேர்ந்த அபிதா பாரூக் என்பவர், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் புகார் செய்தார். இது குறித்து விசாரித்த போலீசார், திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமத்தில் பதுங்கியிருந்த, மூர்த்தி, அனிதா ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை