| ADDED : ஆக 18, 2024 11:57 PM
காஞ்சிபுரம் : செங்கல்பட்டு - தாம்பரம் இடையே, ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து, தாம்பரம் வழியாக எழும்பூர் வரையில் செல்லும் அனைத்து விரைவு ரயில்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று, காலை 8:00 மணி அளவில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரையில் செல்லும் விரைவு ரயில், அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் சென்றது.அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும், மின்சார ரயில் செல்வதற்கு ஏற்ப விரைவு ரயில் ஆங்காங்கே காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.இதனால், ரயில் பயணியர் இடையே, எப்போது நிலையத்திற்கு சென்றடையும் என, சலிப்பு ஏற்படுத்தியது.