உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லாரி மோதி மெக்கானிக்பலி

லாரி மோதி மெக்கானிக்பலி

ஸ்ரீபெரும்புதுார்:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவ்தேஷ்ராய், 38, மெக்கானிக். ஒரகடம் அடுத்த, பண்ருட்டி பகுதியில் தங்கி, கிரேன் சர்வீஸ் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, பண்ருட்டி கண்டிகையில் இருந்து, தான் தங்கியுள்ள அறைக்கு நடந்து சென்றார். வண்டலுார் - - வாலாஜாபாத் சாலையில், பண்ருட்டி பி.எஸ்.பி., மருத்துவமனை அருகே, சாலையை கடக்க முயன்ற போது, ஒரகடத்தில் இருந்து வந்த லாரி மோதியில் அவ்தேஷ்ராய் துாக்கி வீசப்பட்டார்.இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று உயிரிழந்தார். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்