உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துாரில் காஸ் சிலிண்டர் திருடும் மர்ம நபர்

குன்றத்துாரில் காஸ் சிலிண்டர் திருடும் மர்ம நபர்

படப்பை : குன்றத்துாரில் 'இண்டேன்' காஸ் ஏஜன்சி செயல்படுகிறது. இங்கிருந்து, வாகனங்கள் வாயிலாக சோமங்கலம், நல்லுார் உட்பட பல பகுதிகளுக்கு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், நல்லுாரில் நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து, மர்ம நபர் ஒருவர், லோடு நிரப்பப்பட்ட சிலிண்டரை திருடிச்செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, ஏஜன்சி நிர்வாகம், சிலிண்டர் திருடன் குறித்து, குன்றத்துார் போலீசில் புகார் அளித்துள்ளது.சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்கள் கூறுகையில், 'வீட்டு உபயோக சிலிண்டரை, தாடியுடன் திரியும் மர்ம நபர், அடிக்கடி திருடி வருகிறார். இரு நாட்களுக்கு முன், சோமங்கலம், மேட்டூர் பகுதியில், இரண்டு சிலிண்டர்களை திருடியுள்ளார். தற்போது, நல்லுாரிலும் திருடியுள்ளார். மர்ம நபரை போலீசார் கைது செய்ய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்