| ADDED : ஆக 04, 2024 10:38 PM
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த, சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சோசமா வர்கீஸ், 42, இவர், காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு பகுதியில், வண்ண மீன் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.நேற்று, மாலை 3:00 மணி அளவில், மர்ம நபர் மூவரும், வண்ண மீன்களை வாங்குவதற்கு, வண்ண மீன் விற்பனை செய்யும் கடைக்கு சென்று உள்ளனர்.அந்த மூன்று நபர்களும், கண்ணாடி தொட்டிக்குள் இருக்கும் சில வண்ண மீன்களை, வலை போட்டு எடுக்காமல், நேரடியாக கையில் எடுத்துள்ளனர்.இதற்கு, வண்ண மீன் விற்பனையாளர் சோசமா வர்கீஸ், வண்ண மீன்களை கையில் எடுக்க வேண்டாம். வலை பயன்படுத்துங்கள் என, எச்சரிக்கை செய்துள்ளார்.கோபமடைந்த மர்ம நபர்கள் மூன்று பேரும், சோசமா வர்கீசை கையால் பலமாக தாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தின் வாயிலாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர்.சோசமா வர்கீசை தாக்கிய மூன்று பேரையும், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.