உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இந்த மாதம் ஜமாபந்தி கிடையாது: வருவாய் துறை

இந்த மாதம் ஜமாபந்தி கிடையாது: வருவாய் துறை

காஞ்சிபுரம்:'ஜமாபந்தி' எனப்படும் வருவாய் தீர்வாயம், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து தாலுகாக்கள் உள்ளன.ஒவ்வொரு தாலுகாவிற்கும், வருவாய் தீர்வாய அலுவலர்கள் மூலம், தாலுகா அலுவலகத்தின் கணக்குகள் சரிவர மேற்கொள்ளப்பட்டதா எனவும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா போன்ற விபரங்கள் சரிபார்க்கப்படும். இந்தாண்டுக்கான ஜமாபந்தி முகாம், மே மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மே மாதம் ஜமாபந்தி முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷிடம் கேட்டபோது, 'வருவாய் துறை கமிஷனர் அலுவலகத்திலிருந்து எந்த தகவலும் வரவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன் ஜமாபந்தி நடைபெறும். அதற்கான உத்தரவுகள் வந்தவுடன் நடத்தப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை