| ADDED : ஆக 11, 2024 02:14 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் அரும்புலியூர், காவணிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், சொர்ணவாரி பருவத்திற்கு பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.மே மாத இறுதி மற்றும்ஜூன் மாத துவக்கத்தில் நடவு செய்த நெற்பயிர்கள்,தற்போது அறுவடைக்கு தயார் நிலையில்உள்ளன. இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பெய்யும்கனமழை காரணமாக, பல பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிசேதமானது.அதன் ஒரு பகுதியாக அரும்புலியூர், காவணிப்பாக்கம், சீத்தாவரம் ஆகிய பகுதிகளில், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணானது.இதுகுறித்து, நம்நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, வேளாண் அலுவலர்மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குழுவினர் மழைநீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, அரும்புலியூர் குறுவட்ட வேளாண் அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது:சீத்தாவரம், காவணிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ஏரி பாசன விவசாய நிலங்களில், மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் குறித்து கணக்கீடு செய்து, வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு அனுப்பி உள்ளோம்.சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அரசு தான் முடிவு எடுக்கும்.இவ்வாறு கூறினார்.