உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குளத்தில் மூழ்கி முதியவர் பலி

குளத்தில் மூழ்கி முதியவர் பலி

ஸ்ரீபெரும்புதுார் : -சென்னை, எண்ணுார் கத்திவாக்கம், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மணி, 84; வாலாஜாபாத்தில் உள்ளமகள் சசி, 46, வீட்டிலிருந்து நேற்று காலை, ஒரகடம் அடுத்து வல்லக்கோட்டை முருகன்கோவிலுக்கு வந்தார்.பின்னர், கோவில்அருகில் உள்ள குளத்தில் குளிக்க இறங்கிய போது, எதிர்பாராத விதமாக நீரில் தத்தளித்து மூழ்கினார். இதைகண்ட, பக்தர்கள்மற்றும் அக்கம் பக்கத்தினர், ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த போலீசார், குளத்தில் மூழ்கிய முதியவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் அருகில் உள்ள குளத்தில் குளிக்க இறங்கும் போது, அடிக்கடி உயிரீழப்பு எற்பட்டு வருவதால், குளத்தை சுற்றி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என,பக்தர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ