உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நபருக்கு 5 மது பாட்டில்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளில் அதிரடி

நபருக்கு 5 மது பாட்டில்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளில் அதிரடி

உத்திரமேரூர்:லோக்சபா தேர்தலுக்கான பரப்புரை இன்று, மாலை 6:00 மணியோடு நிறைவு பெறுகிறது. 19ம் தேதி, தமிழக முழுதும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.தேர்தல் முறையாக நடைபெறவும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாகவும் இன்று முதல், வரும் 19ம் தேதி வரைஅரசு மதுபான கடைகள் இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு டாஸ்மாக் கடைகள்,3 நாட்கள் மூடப்படுவதால், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட டாஸ்மாக் கடை பகுதிகளில், நேற்று காலை முதலே மதுபிரியர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் கள்ள சந்தையில் மது விற்போர் என கூட்டம், கூட்டமாக நேற்று கடைகளை சூழ்ந்து, மது பாட்டில்களை வாங்க குவிந்தனர்.கடை விடுமுறை நாட்களில் கூடுதல் விலைக்கு மது விற்பதற்காக பெட்டி, பெட்டியாக மது பாட்டில்களை வாங்க சிலர் முன்வந்தனர்.இதேபோன்று,தேர்தல் அன்று கட்சி தொண்டர்களுக்கு மது வழங்க அரசியல் கட்சியினரும் பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் கடைகளை சூழ்ந்தனர்.எனினும், உத்திரமேரூர்,சாலவாக்கம், வாலாஜாபாத், ஊத்துக்காடு உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் பதுக்கலை தடுக்கும் பொருட்டு, ஒரு நபருக்கு அதிகபட்சம் 5 மது பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட்டன.இதனால், விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை முறை குறித்து 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாகவும், விதிகளை மீற இயலாது என, டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை