உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் ஊசலாடும் இரும்பு தகடு பெயர் பலகை

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் ஊசலாடும் இரும்பு தகடு பெயர் பலகை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம் எனப்படும், பழைய ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் வந்து செல்கின்றனர். ரயில் நிலைய நுழைவாயில் வளைவில் உள்ள இரும்பு தகட்டில், 'காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன்' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பெயர் பலகை உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த இரும்பு தகடு பெயர் பலகை ஆங்காங்கே உடைந்து விழும் நிலையில் உள்ளது. பெயர் பலகையை முழுமையாக சீரமைக்க வேண்டிய ரயில்வே நிர்வாகம், அதை கயிற்றால் கட்டி வைத்துள்ளனர்.இதனால், பலத்த காற்றடிக்கும்போது இரும்பு தகட்டினாலான பெயர் பலகை விழுந்து, அவ்வழியாக செல்லும் ரயில் பயணியர் காயமடைந்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, பழைய ரயில் நிலைய நுழைவாயில் வளைவில், ஊசலாடும் நிலையில் உள்ள இரும்பு தகர பெயர் பலகையை அகற்றி, புதிய பெயர் பலகை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை