உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழவேரி சாலை பணி ஒப்பந்ததாரரால் நிறுத்தம்

பழவேரி சாலை பணி ஒப்பந்ததாரரால் நிறுத்தம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழவேரி கிராமம். இக்கிராமத்தில் இருந்து, அருங்குன்றம் கிராமத்தை இணைக்கும் 2 கி.மீ., துாரம் கொண்ட சாலை உள்ளது.பழவேரி, சீத்தாவரம், அரும்புலியூர் உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பழவேரி மற்றும் சுற்று வட்டாரத்தில் தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் லாரிகளால், பழவேரி சாலை நான்கு ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.ஒருங்கிணைந்த கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், இச்சாலையை சீரமைக்க 1.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணியாக தரைப்பாலங்கள் சீரமைப்பு பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கியது.அதை தொடர்ந்து, இரண்டு மாதங்களாக, ஒப்பந்ததாரர் பணி செய்யாததால் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை