உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காற்றோட்ட வசதியில்லாததால் கட்சியினர், அரசு ஊழியர்கள் அவதி

காற்றோட்ட வசதியில்லாததால் கட்சியினர், அரசு ஊழியர்கள் அவதி

காற்றோட்ட வசதியில்லை* காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணிகள், பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லுாரி கட்டடத்தில், இரண்டு தளங்களிலும், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் அறைகள் அமைப்பட்டன. ஆனால், போதிய காற்று வசதியில்லாததால், அரசு ஊழியர்கள், கட்சி முகவர்கள், தேர்தல் அதிகாரிகள், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் என அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகினர்.* ஓட்டு எண்ணும் அறையில், பெரிய அளவிலும், சிறிய அளவிலும் என, மின்விசிறிகள் அமைக்கப்பட்டிருந்த போதும், காற்றோட்டம் இல்லாததால், அதிக வெப்ப நிலை காரணமாக, குறிப்பெடுக்க கையில் வைத்திருந்த நோட், காகிதம் மூலம் விசிறிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை