உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் காட்டாங்குளத்தில் அமைக்க மனு

நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் காட்டாங்குளத்தில் அமைக்க மனு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சி தலைவர் செல்வக்குமரன் தலைமையிலான விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.மனு விபரம்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தை சுற்றி படூர், மலையாங்குளம், அமராவதிபட்டணம், மல்லிகாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் நெல் பயிரிடுகின்றனர்.இப்பகுதிகளில் சம்பா பருவ சாகுபடி காலத்திற்கு மட்டும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்படுகிறது.நவரை மற்றும் சொர்ணவாரி உள்ளிட்ட பருவ சாகுபடி காலங்களில் விளைவிக்கும் நெல்லை வெளி சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம்.எனவே, போக்குவரத்து வசதியை கருதியும், விவசாயிகளின் சிரமத்தை போக்கும் வகையில் காட்டாங்குளத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.அதற்கு தேவையான இடவசதி காட்டாங்குளம் கிராமம், சர்வே எண் 153/1ல் உள்ளது. இதற்கான வருவாய்த் துறை ஆவணங்களின் நகல்களை மனுவுடன் சமர்ப்பித்துள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ