உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுாரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

ஸ்ரீபெரும்புதுாரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, ஸ்ரீபெரும்புதுார் குறு வட்டத்தில், வரும் 21ம் தேதி, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெற உள்ளது.கோரிக்கை மனு அளிக்க விரும்புவோர், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகத்தில், வரும் 21ம் தேதி அன்று, மாலை, 4:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரையில், மனுக்களை அளிக்கலாம்.இது தவிர, இ- - சேவை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், சத்துணவு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையம், நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய கிடங்கு, பள்ளிகள் ஆகியவை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்