உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் கடை ஊழியரை தாக்கியவருக்கு காப்பு

ரேஷன் கடை ஊழியரை தாக்கியவருக்கு காப்பு

செய்யூர்:செய்யூர் அருகே நெமந்தம் கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடையில், விற்பனையாளராக பணிபுரிபவர் லோகநாதன், 30.நேற்று, ரேஷன் கடையில் அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டது. நெமந்தம் கிராமத்தை சேர்ந்த சிவா, 49, என்பவர், பொருட்களை சீக்கிரம் வழங்குமாறு கேட்டுள்ளார்.அப்போது, லோகநாதனுக்கும் அவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவா லோகநாதனை தாக்கினார்.இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர் லோகநாதன், செய்யூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் சிவாவை கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை