உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 119 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

119 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

சாலவாக்கம்:தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 பயிலும் 119 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க.,எம்.எல்.ஏ., சுந்தர்பங்கேற்று சைக்கிள்கள் வழங்கினார்.அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பக்தவச்சலம் மற்றும் தி.மு.க., ஒன்றியசெயலர் குமார், சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா உட்பட பலர்உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி