உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மஞ்சள்நீர் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

மஞ்சள்நீர் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருக்காலிமேடு செல்லும் வழியில், விளையாட்டு அரங்கம் பின்புறம், மஞ்சள்நீர் கால்வாயில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, விஷ்ணுகாஞ்சி போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை செய்ததில், கால்வாயில் ஐந்து நாட்களுக்கு முன்பாக, இறந்த நபர் விழுந்திருக்கலாம் எனவும், 50 வயது இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.இறந்த நபர் பற்றிய விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ